ஜோதிட ஸ்ரீ, “ஆன்மிகன் ஜோதிடக் குழுமம்”
By srarulvel@gmail.com / July 18, 2026 / 1 Comment / எம்மை பற்றி
ஜோதிட ஸ்ரீ, “ஆன்மிகன் ஜோதிடக் குழுமம்” நிறுவனர் இரா.அருள்வேல் Ph.D ஜோதிடர், பஞ்சாங்கக் கணிதர் அவர்கள் தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் நகரில் 12.11.1962 அன்று பிறந்தார். அதிகபட்சக் கல்வித் தகுதியாக ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஜோதிடத்தில் 40 வருட அனுபவம் உடையவர்.
தான் கற்ற, தெளிவு பெற்ற, தனது சிந்தனையில் உதித்த ஜோதிடம் சார்ந்த விசயங்களைத் தொகுத்து 9 நூல்களையும்; லேப்டாப் மற்றும் மொபைல் ஷாப்ட்வேர்களையும் வெளியிட்டுள்ளார். ஜோதிடம் கற்க விரும்புவோருக்கு வசதியாக நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறார். பயிற்சியில் திருப்தி இல்லையென்றால் பணம் வாபஸ் எனும் உத்திரவாதம் அளிக்கிறார். சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தோருக்குள் இராசி, நவாம்சம், கிரக நிலைகள், அஷ்டவர்க்கம், ஷட்பலம் போன்றவை ஒன்றுபோல் இருந்தாலும் அந்நபர்களுக்கு வித்தியாசமான பலன் கூறும் முறையைக் கற்பிக்கிறார்.
தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்கி ஜோதிடப் பாடங்களைப் படிக்கும் நபர், 3 மாதங்களில் பயிற்சியில் தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெறுவோருக்கு இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற, சர்வ தேசத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்க. +91 9842841497

hi